நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கல்பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் விலங்குகள், பறவைகளின் சிற்பங்கள் உள்ளன. கலெக்டர் அலுவலகத்திற்கு பெற்றோருடன் வருகை தரும் சிறுவர், சிறுமிகள் இந்த பூங்காவை பார்வையிட்டு செல்வது உண்டு. ஆனால் சமீபகாலமாக தொடர்ச்சியாக பெய்து வரும் மழைக்கு இந்த பூங்கா புதர்மண்டி காணப்படுகிறது. இந்த புதர்களை அகற்றி, பூங்காவை தூய்மையாக வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுகுமார், நாமக்கல்.