மது பிரியர்களால் தொல்லை

Update: 2024-11-10 17:28 GMT

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த கடையில் மது வாங்க கூடிய பலரும், பஸ் நிலையம் அருகில் உள்ள பூமாலை வளாகம் பகுதியில் அமர்ந்து மது குடிக்கிறார்கள். காலை முதல் இரவு வரையில் பலரும் அந்த இடத்தில் அமர்ந்து மது குடிப்பதால் அந்த சாலை வழியாக செல்ல பொதுமக்கள் அச்சமடைகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் மது பிரியர்கள் பலரும், போதையில் பாட்டில்களை அங்கு உடைத்து செல்கிறார்கள். மேலும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இதனால் அந்த சாலையை இரவு நேரத்தில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மக்கள் நடமாட்டம் உள்ள பஸ் நிலையம் அருகில் பூமாலை வளாகத்தில் மது பிரியர்கள் அமர்வதை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சின்னசாமி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்