பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பையர்நத்தம் ஊராட்சியில் தொடக்கப்பள்ளி அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மழை பெய்யும்போது அங்கன்வாடி ைமயத்தின் தரைதளம் முழுவதும் ஈரமாக உள்ளதால் குழந்தைகள் சிரமம் அடைகின்றனர். மேலும் சுற்றுச்சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு கருதி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நேரும் முன் சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும்.
-முருகன், பாப்பிரெட்டிப்பட்டி.