சேதமான அங்கன்வாடி கட்டிடங்கள்

Update: 2024-10-27 17:07 GMT

பர்கூர் தாலுகா காரக்குப்பத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் மழை பெய்யும் போது மழைநீர் மேற்கூரை வழியாக உள்ளே வருகிறது. எனவே பெரும் அசம்பாவித சம்பவம் ஏதும் நேரும் முன் தாமதமின்றி சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும்.

-வேல்முருகன், பர்கூர்.

மேலும் செய்திகள்