பொதுமக்கள் அச்சம்

Update: 2024-10-27 11:36 GMT

பந்தலூர் பஜாரில் கால்நடைகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக உலா வருகின்றன. இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக நடந்து வருபவர்களை சில நேரங்களில் தாக்க முயல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்லும் நிலை உள்ளது. மேலும் விபத்து அபாயமும் காணப்படுகிறது. எனவே அங்கு கால்நடைகள் நடமாட்டத்தை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி