தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட், டீச்சர்ஸ் காலனி, மசூதி தெரு ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதியில் காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் இந்த பகுதி வழியாக செல்பவர்கள் பயத்துடனேயே செல்கின்றனர். எனவே தெருநாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சபரி, வெண்ணாம்பட்டி.