ஓமலூரில் இருந்து தாரமங்கலம், மேட்டூர் மாதேஸ்வரன் மலை போன்ற இடங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. ஒரு சில பஸ்கள் பஸ்நிலையத்திற்கு வராமல் காந்தி சிலை அருகில் நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன. பொதுமக்கள் வெயில், மழைக்காலங்களில் நின்று அவதிப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள், பயணிகளின் நலன் கருதி அந்த பகுதியில் நிழற்கூடம் ஒன்று கட்டி தரவேண்டும்.
-வேலு, ஓமலூர்.