வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மின்னக்கல்லில் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல சான்றிதழ்கள் பெறுவதற்கு வந்து செல்கிறார்கள். இந்நிலையில் அங்கு உதவியாளர் இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இங்கு உதவியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
-குணசேகரன், மின்னக்கல்.