கிருஷ்ணகிரி நகரில் சமீப காலமாக சாலையோரங்களில் ஏராளமான உணவகங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆட்டோ, சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்களில் கொண்டு வந்து பிரியாணி விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய உணவுகள் தரமாக விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறதா? என தெரியவில்லை. இந்த உணவுகள் தரமாக தயாரிக்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும்.
-வசந்த், கிருஷ்ணகிரி.