சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகலூர்கேட் பகுதியிலிருந்து நாமக்கல் வரை பயணிகள் நிழற்கூடம் முக்கிய பஸ் நிறுத்தங்களில் அமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பயணிகள் நிழற்கூடம் சேதம் அடைந்து காணப்படுகிறது. பயணிகள் நிழற்கூடம் அருகே பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்காக சின்டெக்ஸ் தண்ணீர் டேங்க் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தொட்டியில் தண்ணீர் இன்றி உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் நிழற்கூடத்தை சீரமைத்து சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் நிரப்பி பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பயனடைய செய்ய வேண்டும்.
-கண்ணன், புதுச்சத்திரம்.