கிருஷ்ணகிரி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி நகரில் ராயக்கோட்டை சாலையில் விளையாட்டு மைதானம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றுகின்றன. மேலும் தினமும் பலரும் தெருநாய் கடியால் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்புபவர்கள் தெருநாய்கள் கூட்டத்திற்கு பயந்தபடியே செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதேபோல கிருஷ்ணகிரி நகரில் ஜக்கப்பன் நகர், பழைய பேட்டை, பெரிய மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருநாய் ெதால்ைலயை கட்டுப்படுத்த அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நகரப் பகுதிகளில் சுற்றும் தெருநாய்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த நகராட்சி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?
-விக்னேஷ், கிருஷ்ணகிரி.