தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் பல இடங்களில் செடி, கொடிகள் மண்டி கிடக்கிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் குப்பை கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு வரும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு மீண்டும் நோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவமனை வளாகத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
-முத்துசாமி, கடத்தூர்.