திசைகாட்டும் பலகை அமைக்கலாமே!

Update: 2024-09-08 19:57 GMT

ராசிபுரம்-ஆத்தூர் பிரதான சாலையில் சீராப்பள்ளி அருகே உள்ள வெங்கச்சிக்கல் மேடு என்ற இடத்திலிருந்து வடுகம் முனியப்பன்பாளையம், பட்டணம், ஆர்.புதுப்பட்டி போன்ற ஊர்களுக்கு இரு சக்கர வாகனங்கள், கார், பஸ், லாரிகள் சென்று வருகின்றன. வெளியூர்களிலிருந்து வாகனங்களில் வருவோர் வடுகம் முனியப்பன்பாளையம், வடுகம் வழியாக ஆர்.புதுப்பட்டி போன்ற கிராமங்களுக்கு செல்வதற்கு வழி தெரிவதில்லை. எனவே வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வெங்கச்சிக்கல் மேடு பகுதியில் திசைகாட்டும் பலகை வைத்தால் எளிதாக மேற்கண்ட ஊர்களுக்கு செல்ல வசதியாக இருக்கும் என்பதே வாகன ஓட்டிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது. எனவே திசைகாட்டும் பலகை வைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குபேரன், சீராப்பள்ளி.

மேலும் செய்திகள்