கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஒசஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு சொந்தமாக மன்ற கட்டிடம் உள்ளது. இதன்மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. கட்டிடத்தின் மேற்கூரை பெயர்ந்தும், கம்பிகள் துருப்பிடித்தும், கதவு, ஜன்னல்கள் பழுதடைந்தும் காணப்படுகிறது. பல்வேறு தேவைகளுக்காக இங்கு வரும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சேதமடைந்த நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சீரமைக்க வேண்டும்.
-சந்துரு, கடத்தூர்.