திசையன்விளை 2-வது வார்டு இட்டமொழி சாலையில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளதாக ஆல்பர்ட் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு புதிய மின்கம்பம் அமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.