தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றுவதால் வீதியில் நடமாடவே பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் துரத்துவதால் சிறுவர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் அச்சத்துடனேயே சாலையில் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. மேலும் தெருநாய்கள் இருசக்கர வாகனங்களின் குறுக்கே செல்வதால் அடிக்கடி விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளன. எனவே நாளுக்கு நாள் பெருகி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், பாலக்கோடு.