ஓமலூர் மாரமங்கலம் புது காலனியில் சுகாதார வளாகம் பல மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் சுகாதார வளாக கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களும், பெண்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் சுகாதார வளாகத்தை சுற்றி புதர் மண்டி காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் பூட்டி கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வன், சேலம்.