தொற்று நோய் பரவு அபாயம்

Update: 2024-08-11 13:32 GMT


தஞ்சை கீழவாசல் டபீர் குளம் ரோடு எஸ்.என்.எம். நகரில் ஏரளாமான குடியிருப்புகள் உள்ளன. அந்த பகுதியில் தொழிற்சாலைகள் உள்ளதால் அதன் கழிவுகள் அருகில் உள்ள குடியிருப்புகளில் சூழ்ந்து விடுகிறது. மேலும் அங்கிருந்து வெளிவரும் புகையால் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மூச்சுதிணறால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கழிவுகள் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தொற்று நோய் பரவும் அபாயத்தை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கீழவாசல்

மேலும் செய்திகள்