சேலம் தம்மம்பட்டி வண்ணாரத்தெருவில் பொரி பட்டறை உள்ளது. இந்த பொரி பட்டைறையில் இருந்து வெளியேறும் கரும்புகை பகல் முழுவதும் வெளியேறி வருகிறது. இதனால் பொரி பட்டறை அருகில் உள்ள தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் மூச்சு திணறல், கண் எரிச்சல் எற்படுகிறது. இதனால் இந்த பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அதிகாரிகள் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தருண், சேலம்.