சேதமடைந்த அரசு கால்நடை மருத்துவமனை

Update: 2024-08-04 17:07 GMT

பாலக்கோடு தாலுகா கல்கூடஅள்ளியில் அரசு கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை சேதமடைந்து உள்ளதால் மழை நேரங்களில் தண்ணீர் கசிந்து கட்டிடத்திற்குள் வழிகிறது. மேலும் கால்நடை மருத்துவமனையின் கதவு, ஜன்னல் உடைந்து காணப்படுகிறது. இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய அரசு கால்நடை மருத்துவமனை அமைத்து தர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

-சிவகுரு, பாலக்கோடு.

மேலும் செய்திகள்