கிருஷ்ணகிரி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலை, பெங்களூரு சாலை, சேலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பள்ளிக்கு செல்ல கூடிய மாணவ, மாணவிகள் அச்சமடைகிறார்கள். நாய் கடியால் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக இரவு நேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஒரே இடத்தில் 40-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுவதால் பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அகிலன், கிருஷ்ணகிரி.