சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

Update: 2024-07-21 17:59 GMT

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே புட்டிரெட்டிப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த கால்நடை மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்துள்ளது. இதனால் கால்நடை மருத்துவமனையில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. மேலும் மதுபாட்டில்களை மருத்துவமனை வளாகத்திலேயே வீசி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடை மருத்துவமனையின் சுற்றுச்சுவரை சீரமைக்க முன்வர வேண்டும்.

-பிரசன்னன், தாளநத்தம்.

மேலும் செய்திகள்