தேவணாம்பாளையத்தில் இருந்து வகுத்தம்பாளையம் செல்லும் சாலையில் பி.ஏ.பி. கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. இது மிகவும் குறுகலாக உள்ளது. மேலும் பாலத்தின் நடுவில் பள்ளமாக உள்ளதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே அந்த பாலத்தை விரிவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.