கிருஷ்ணகிரி-பர்கூர் தேசிய நெடுஞ்சாலையில் பர்கூரில் சாலையின் இருபுறமும் பிரியாணி கடைகள் உள்ளன. இந்த கடைகள் பிரியாணியை அங்குள்ள பழமையான புளியமரத்தின் அடியில் விறகு அடுப்பில் சமைக்கின்றனர். இதனால் அனல் காற்று புளியமரத்தில் வீசுவதால் இலைகள் கருகி சேதம் அடைகின்றன. மேலும் பிரியாணிக்கு வைக்கும் சுடுநீரை புளியமரத்தின் வேர் பகுதியில் ஊற்றுகின்றனர். சாலையோரத்தில் சமைப்பதால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மரத்தின் அருகே சமைக்காமல் வேறு பகுதி அல்லது சிறிது தூரம் தொலைவில் சமைத்து மரங்களை காக்க வேண்டும்.
- குமார், பர்கூர்