தம்மம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர் 2-வது வார்டில் ஆண்கள் கழிப்பறை கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரமால் பூட்டியே கிடக்கிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் பூட்டி கிடக்கும் கழிப்பறை கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சர்வேஷ், சேலம்.