நோய் பரவும் அபாயம்

Update: 2024-06-09 15:04 GMT

பொள்ளாச்சி அருகே சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி அழகப்பா காலனி, காமராஜர் வீதி ஆகிய பகுதிகளில் உப்பு தண்ணீர் குழாய் உடைந்து பல மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை அதை சரி செய்ய அதிகாரிகள் முன்வரவில்லை. மேலும் அங்குள்ள சாலையும் பழுதடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. நடந்து செல்லும்போது கூட தவறி விழும் நிலை உள்ளது. அதோடு கொசுத்தொல்லை அதிகரித்து பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே இந்த பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்