கால்நடை மருத்துவமனை செயல்படுமா?

Update: 2024-05-05 18:11 GMT

பர்கூர்- திருப்பத்தூர் சாலையில் கால்நடை மருத்துவமனை உள்ளது. இந்த கால்நடை மருத்துவமனையில் டாக்டர்கள் சரிவர இருப்பதில்லை. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுடைய கால்நடைகளை சிகிச்சைக்காக அருகே உள்ள நகரத்திற்கு கூட்டி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்நடை மருத்துவமனையை தினமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சக்தி, பர்கூர்.

மேலும் செய்திகள்