சேதமடைந்த ரேஷன் கடை

Update: 2024-04-21 18:08 GMT

மேட்டூர் தாலுகா ராமன் நகரில் ரேஷன் கடை உள்ளது. இந்த கட்டிடம் சேதமடைந்து, விரிசலுடன் காணப்படுகிறது. மேலும் கட்டிடத்தின் உள்புறம் மற்றும் வெளிபுறம் அதிக விரிசல்களுடன் சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்துவிழும் அபாய நிலையில் உள்ளது. அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சேதமடைந்த கட்டிடத்தை புதுப்பித்து தருவார்களா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

-செந்தில், சேலம்.

மேலும் செய்திகள்