பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட எருமாடு அருகே கூலால் ஆதிவாசி காலனி உள்ளது. இங்குள்ள மக்கள் பாழடைந்த வீடுகளில் வசித்து வருகிறார்கள். அதிலும், அருகில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் ராட்சத மரங்கள் நிற்கின்றன. சூறாவளி காற்று, மழையின்போது அதன் கிளைகள் முறிந்து வீடுகளில் மீது விழுகின்றன. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த மரங்களை வெட்டி அகற்றுவதோடு புதிய தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.