விக்கிரவாண்டி அருகே சித்தேரி, செம்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள குளங்கள் பராமரிப்பின்றி தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் குளத்தில் மழைக்காலங்களில் அதிகளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவது மட்டுமின்றி, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. எனவே குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.