வாலாஜா பஸ் நிலைய வளாகத்தில் பயணிகள் பஸ்சுக்காக காத்திருக்கும் பகுதியை தள்ளுவண்டி வியாபாரிகள் ஆக்கிரமித்து பயணிகளுக்கு தொல்லை கொடுக்கின்றனர். இதனால் பயணிகள், வயது முதிர்ந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் நிற்க இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். பஸ் வரும் பாதையிலே நிற்க வேண்டிய அவலநிலை உள்ளது. பஸ் நிலைய வளாகத்தை ஆக்கிரமித்துள்ள தள்ளுவண்டி வியாபாரிகளை வெளியேற்றி நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கபீர்தாஸ், வாலாஜா.