உடற்பயிற்சி கூடம் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2026-03-08 19:21 GMT

வேலூர் சத்துவாச்சாரி காந்திநகர் அருகே தாட்கோ நகர் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை சார்பில் அதிநவீன உடற்பயிற்சி கூடம் கட்டி திறக்கப்பட்டது. எனினும் தற்போது வரை அந்த உடற்பயிற்சி கூடம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி இளைஞர்கள் உடற்பயிற்சி கூடத்துக்கு வெகுதூரம் சென்று வருகின்றனர். உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சண்முகசுந்தரம், வேலூர்.

மேலும் செய்திகள்