நாட்டறம்பள்ளி ஒன்றியம் அம்பலூர் ஊராட்சியில் இருந்து ராமநாயக்கன்பேட்டை செல்லும் சாலையில் பாழடைந்த நிலையில் அரசு ஓட்டு கட்டிடம் உள்ளது. அந்தக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. பாழடைந்த அரசு கட்டிடத்தை அதிகாரிகள் அகற்றுவார்களா?
-சம்பத், அம்பலூர்.