விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை அப்பகுதியில் திறந்திருக்கும் கடைகள், வீடுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடிச்செல்கின்றன. மேலும் விரட்ட வரும் பொதுமக்களை கடிக்க பாய்கின்றன. எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.