கழிவறை கட்ட வேண்டும்

Update: 2026-03-08 18:59 GMT

வந்தவாசி தாலுகா தெள்ளார் கிராமத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பல ஆண்டுகளாக கழிவறை வசதி இல்லை. தெள்ளார் பகுதியில் மக்கள் தொகையும், வாகனப் போக்குவரத்தும் அதிகரித்து விட்டது. பஸ் நிறுத்தத்தில் காத்திருக்கும் பெண் பயணிகள் கழிவறை வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஆண்கள் திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. கழிவறை கட்டினால் அந்தப் பகுதி மக்களும் பயன்படுத்தலாம். தெள்ளார் பகுதியில் கழிவறை கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.மணிவண்ணன், தெள்ளார். 

மேலும் செய்திகள்