சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகபுதூர் பஸ் நிறுத்தம் அருகே கரிய காளியம்மன் கோவில் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே மின்கம்பிகள் செல்கின்றன. இவற்றின் மீது சாலையோரம் உள்ள மரத்தின் கிளைகள் அதிகமாக படர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல வாகனங்களின் மீது உரசி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மரக்கிளைகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் முன்வருவார்களா?