வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடையாஞ்சி ஊராட்சியில் கல்லறைக்கொட்டாய் புளியந்தோப்பு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நெற்களம் அமைத்துள்ளனர். 1½ ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழை, காற்றால் ஒரு புளியமரம் வேரோடு நெற்களத்தில் சாய்ந்தது. இதனால், விவசாயிகள் நெற்களத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புளியமரத்தை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?
-அருளானந்தம், கொடையாஞ்சி.