செஞ்சி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்கப்பாய்கின்றன. இதனால் அவர்கள் சாலையில் செல்லவே பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.