வேலூர் நகரில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. அவை கலெக்டர் அலுவலகத்தையும் விட்டு வைக்கவில்லை. கலெக்டர் அலுவலக மேல் மாடி தளத்துக்கு சென்று ஓய்வெடுக்கின்றன. அங்கேயே அசுத்தம் செய்கின்றன. நாய்களை கலெக்டர் அலுவலக கட்டிட வளாகத்தை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.
-ஜெயக்குமார், வேலூர்.