ஆபத்தான மரங்கள்

Update: 2024-03-24 13:12 GMT
  • whatsapp icon

வால்பாறை நகரில் நகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் உள்ளது. இந்த பகுதியை ஒட்டி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் அபாயகரமான நிலையில் ராட்சத கற்பூர மரங்கள் நிற்கின்றன. சூறாவளி காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் சமயத்தில் மரங்களின் கிளைகள் முறிந்து, அருகில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் மீது விழுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்குள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்