ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-12-17 17:05 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் நீர் தேக்கி வைக்கப்படுகிறது. ஓடப்பள்ளியில் நீர்மின் நிலையம் இருப்பதால், அங்கு தண்ணீர் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் நீர் தேங்கி உள்ளது. இந்தநிலையில் ஆற்றில் அடித்து வரும் ஆகாயத்தாமரைகள் சிறிய அளவில் வருகின்றன. பின்னர் தேங்கிய தண்ணீரில் அவைகள் இருப்பதால், அதிக அளவில் வளர்ந்து காவிரி ஆறு முழுவதும் சூழ்ந்து காணப்படுகின்றன. இதனால் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகரிப்பதுடன் கரையோரப்பகுதிகளில் உள்ள வீடுகளில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. மேலும் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

-ரமேஷ், பள்ளிபாளையம்.

மேலும் செய்திகள்