சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா கரியானூர் ரேஷன் கடையின் உள்பகுதி மேற்பகுதி இடிந்து பெயர்ந்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த மேற்கூரையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-அருள், சங்ககிரி, சேலம்.