சேலம் 5 ரோடு, அழகாபுரத்தில் இருந்து 5 ரோடு செல்லும் சாலையில் சிக்னல் அருகே சாலையையொட்டி பயணிகளின் வசதிக்காக நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியின் போது பள்ளம் ஏற்பட்டு இரும்பு கம்பி வெளியே தெரிகிறது. இந்த ஆபத்தான பள்ளத்தில் சில சமயங்களில் பொதுமக்கள் தவறி விழுந்து காயமடைகின்றனர். எனவே இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?
-ரமேஷ், சேலம்.