சாலை, தெருவிளக்கு வசதி

Update: 2023-10-08 17:15 GMT

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் அரசு தோட்டக்கலைத்துறை, போலீஸ் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம், தனியார் பள்ளி ஆகியன உள்ளன. இந்த பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும்போது வாகனங்களில் இருந்து தவறிவிழுந்து காயமடைகிறார்கள். மேலும் இந்த பகுதியில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளிேய செல்ல அச்சமடைகிறார்கள். அங்கு திருட்டு சம்பவமும் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதிக்கு சாலை, தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும்.

-சுப்பிரமணியம், ஜாகீர்அம்மாபாளையம், சேலம்.

மேலும் செய்திகள்