அடிப்படை வசதி தேவை

Update: 2023-10-01 17:12 GMT

சேலம் அண்ணா நகர் 9-வது வார்டு பகுதி மக்களுக்கு சாலை, தெரு விளக்கு, சாக்கடை வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் சாக்கடை நீரும் மழைநீரும் கலந்து செல்கிறது. இதனால் இங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரவேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

-ராஜா, அண்ணாநகர், சேலம்.

மேலும் செய்திகள்