ஈரோடு எல்லை மேட்டில் உள்ள முத்துநகர் பகுதியில் சென்னிமலை ரோட்டில் வேகத்தடைக்கு வர்ணம் பூசப்படாமல் இருந்தது அதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் ஏறி, இறங்கி தடுமாறி விழுந்தார்கள். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதையடுத்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தற்போது வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூச ஆவன செய்துள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நடவடிக்ைக எடுத்த அதிகாரிகளுக்கும் முத்துநகர் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவிக்கிறோம்.