வேகத்தடை ேவண்டும்

Update: 2022-07-25 17:54 GMT

ராணிப்பேட்டை தலைமை தபால் நிலையம் அருகே உள்ள வாழக்கரை அம்மன் கோவில் தெருவில் இருந்து, பழைய பஸ் நிலையம் அமைந்துள்ள பிரதான சாலையான சென்னை-கிருஷ்ணகிரி சாலைக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

காரணம் கிருஷ்ணகிரி சாலை வழியாக ஆற்காடு, வேலூர், திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களும், இதர வாகனங்களும் சென்று கொண்டே இருப்பதால் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் இச்சாலையை கடக்க மிகுந்த சிரமப்படுகின்றனர். விபத்துகளும் ஏற்படுகிறது.

எனவே ராணிப்பேட்டை தலைமை தபால் அலுவலகம் அருகே ஒரு வேகத்தடையை அமைத்து தந்தால் விபத்துகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

மேலும் செய்திகள்