வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் இருந்து கார்பாடிக்கு திரும்பும் சாலையின் ஒரு பகுதி இன்னும் தார் சாலை அமைக்க வில்லை. இதனால் வாகனங்கள் செல்லும்போது தூசு அதிக அளவில் கண்களை மறைக்கும் அளவுக்கு பறக்கிறது. இதனால் வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சாலையை விரைவாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-மோகன்தாஸ், வேலூர்.