ஆற்காடு தொகுதிக்கு உட்பட்ட கணியம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட குரங்குகள், கடந்த 3 மாதமாக முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகிறது. மருத்துவமனை நுழைவு வாயிலில் அமர்ந்து கொண்டு, உள்ளே செல்லும் நோயாளிகளிகளை அச்சுறுத்துகிறது. மேலும் பைக் மீது ஏறி சீட்டுகளை கிழிப்பது, டேங்க் கவரை கிழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்.
-பாபு, கணியம்பாடி.