போளூர் நகரில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்லும் சிறுவர்-சிறுமிகளிடமிருந்து புத்தகப்பை, தின்பண்டங்களை பிடுங்கி கொள்கிறது. சிலரை கடித்தும் உள்ளது. கதவு திறந்துள்ள வீடுகள் உள்ளே சென்று பொருட்களை நாசப்படுத்தி வருகின்றன. பேரூராட்சி நிர்வாகம் விரைந்து குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லட்சுமிநராயணன், போளூர்